மட்டக்களப்பில் சூழல் மாசடைவிற்கு எதிராக கண்டனப் பேரணி (Photos)
மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் இடம்பெறும் இயற்கை வள சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி வாகரை பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்த கண்டனப்பேரணி நேற்றையதினம் (08.06.2023) இடம்பெற்றுள்ளது.
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் நீண்ட காலமாக அரச மற்றும் தனியார் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலியல் நீதியை பாதிக்கும் வகையிலான இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணை திட்டங்களை முற்றாக தடை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முற்றாக நிறுத்த வேண்டும்
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) அமைப்பின் அனுசரணையுடன் வாகரை பிரதேச சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
மக்களால் இயற்கை வளங்களைப் பாதிக்கும் வகையிலான அனைத்து திட்டங்களையும் முற்றாக நிறுத்தக் கோரிய மனு ஒன்றும் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
இப்பேரணியில் வாகரைப் பிரதேசத்தின் விவசாய மீனவ அமைப்புக்கள், இளைஞர்கள், பெண்கள் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



