மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட விவசாயக் குழு கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று (01.02.2024) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட விவசாயம், பெரும்போக விவசாயத்தின் முன்னேற்றம், மழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட விவசாய நிலங்களுக்கான காப்புறுதி நட்ட ஈடு வழங்குதல், தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நியாயமான விலை
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச்செய்கைக்காண கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரடியனாறு விவசாய ஆராய்ச்சி மையத்திற்கான விவசாய ஆராய்ச்சி அதிகாரியின் நியமனம் தொடர்பாக விவசாயிகளினால் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், நெல்லுக்கான விலை நிருணயம் செய்வதனால் தமது நெல்லினை நியாயமான விலையில் விற்பனை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழு தலைவர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
