போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், வர்த்தக இராஜாங்க அமைச்சரும் போரதீவுப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு,கடந்த வெள்ளிக்கிழமை(02.02.2024) மாலை வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகிய இக்குழுக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
விஷேட கலந்துரையாடல்
மேலும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், பிரதேசத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும், மிக முக்கியமாக "உடன் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள்" குறித்தும் மிக விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக வீதிஅபிவிருத்தி, விவசாயம், போக்குவரத்து, நீர்ப்பாசனம், வாழ்வாதாம், சுகாதாரம், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்தோடு கலந்துரையாடலில் கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது கிராமங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள் குறித்து கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் தமது கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri
Bigg Boss: உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? மைக்கை மறைத்து பண்ணாதீங்கனு... கொந்தளித்த பிக்பாஸ் Manithan