மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்தானது, வந்தாறுமூலைபகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தானது, முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் சில பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) இருந்து கொழும்பு (Colombo) நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து சம்பவம்...
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் சற்று முன்னர் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், எமது ஊடகவியலாளர்கள் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொண்டதை அடுத்து ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |