மட்டக்களப்பில் இளைஞர் ஒருவரின் தகாத செயல் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவானது நேற்று (29.09.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15 வயதும் 9 மாதம் கொண்ட சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக அவரை, அவரது பெற்றோர் வைத்தியசாலையில் சம்பவதினமான 28ஆம் திகதி வியாழக்கிழமை அனுமதித்தனர்.
இதன்போது ஆரம்ப பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதை கண்டறிந்தனர்.
குறித்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த வாகனம் திருத்தும் இடம் ஒன்றில் வேலை செய்துவரும் 18 வயதுடை இளைஞனுடன் காதல் தொடர்பில் இருந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த இளைஞனை நேற்று 29ஆம் திகதி கைது செய்த பொலிஸார் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானிடத்தில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேகநபரை நீதவான் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
