அரச நியமனம் கோரி வீதிக்கு இறங்கிய மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள்
படிக்காவிட்டால் வீதிகளில் திரிவீர்கள் என்று எங்களுக்கு வீட்டில் சொல்லி சொல்லி படிக்க வைத்தார்கள். நாங்கள் படித்து பட்டம்பெற்றதன் பின்னர் வேலைக்காக வீதி வீதியாக திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(02) காலை மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அசர நியமனம் வேண்டும்..
காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு
அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அரச நியமனத்தினை வழங்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கான அரச நியமனங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பாராமுகமாகவும் இருப்பதாகவும் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டதுடன் பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கலந்துகொண்டதுடன் ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரியும் கலந்துகொண்டார்.
இதன்போது பட்டப்படிப்புக்கு வேலையில்லையெனின் பல்கலைக்கழகங்களை இழுத்துமூடு, நாங்கள் பட்டதாரிகளா நட்டதாரிகளா, வேண்டும் வேண்டும் வேலை வேண்டும், பட்டம் கிடைத்தும் பலனில்லை, அரசு தொழில் தரமறுப்பதினால்.. போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
தமது போராட்டமானது இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கான நியமனங்கள் கிடைக்கும் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


















சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
