மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி சிறுவர்கள் இருவர் பரிதாபமாக பலி (VIDEO)
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருவர் பரிதாபமாக பலி
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ள அதேவேளை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிக வேகத்துடன் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri