மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி - தாயும்,மகளும் படுகாயம்
மட்டக்களப்பு - சந்திவெளியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

தாயும்,மகளும் படுகாயம்
குறித்த விபத்தில் முருகன் கோவில் வீதி கோரகல்லிமடு கிரான் எனும் இடத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஜீவரெத்தினம் சனுஜன் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
அத்தோடு, சந்திவெளி சந்தை வீதியைச் சேர்ந்த தாயும், 04 வயதுடைய மகளும் பலத்த காயங்களுக்குள்ளாகி சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri