யாழில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாலை மரக் குற்றிகள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் மண்ணுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய மூத்த பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன தலைமையில், இன்று (12.05.2024) காலை சாவகச்சேரி - சரசாலை பகுதியில் வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது சுமார் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரை மிரட்டி விட்டு டிப்பர் சாரதி தப்பித்து சென்றுள்ளார்.

எனினும், மீட்கப்பட்ட மரக் குற்றிகளுடன் டிப்பர் வாகனம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 11 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri