சமூக ஊடகங்களின் வழியாக இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களை வெளியிட்டு பயனாளிகளின் வங்கி விபரங்களை திருடி பணமோசடி செய்வது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இதுவரை 03 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோபொல தெரிவித்துள்ளார்.
பயனர்கள் சில விளம்பரங்களைக் கிளிக் செய்யும் போது, அவர்கள் வேறொரு தகவலுக்குத் திருப்பிவிடப்பட்டு, இந்த வங்கி விபரத்திருட்டு மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய செயலி ஒன்றை பதிவிறக்கக்கூறி, விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களின் தொடர்புடைய கொள்வனவை மையப்படுத்தி இந்த மோசடி இடம்பெறுகிறது.
பயனர்கள் புதிய செயலியை கையாள்வதை தொடர்ந்தால், பயனர்களின் கையடக்கத்தொலைபேசியின் கட்டுப்பாடு மூன்றாம் தரப்பினரின் (மோசடிக்காரர்களின்) கைகளுக்கு செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மோசடியாளர் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வார் என்று இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT) எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |