நாட்டு மக்களின் செயலால் அச்சத்தில் பசில்!-செய்திகளின் தொகுப்பு
மக்கள் தொடர்பில் பசில் ராஜபக்ச மிகுந்த அச்சத்திலேயே இருப்பதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். இதேவேளை ரணில் - ராஜபக்ச ‘திருடன் - பொலிஸ்’ விளையாட்டையே விளையாடி கொண்டிருப்பதாகவும் கேலி செய்துள்ளார்.
ரணில் - ராஜபக்சர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதும் ராஜபக்சர்கள் ரணிலுக்குப் பொறுப்புகளை வழங்குவதுமே அரசியலில் இத்தனை காலமாக நீடித்திருந்தது. எவ்வாறாயினும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இதனை சவாலுக்கு உட்படுத்தினார்கள்.
இதன் பின்னர், எதிர் எதிர் திசையிலிருந்து திருடன் - பொலிஸ் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த ரணில் - ராஜபக்சாக்கள் ஓர் இடத்துக்கு வந்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பேச்சுகளை நன்கு அவதானித்தால், அவர் போராட்டக்காரர்களுக்கும் சோஷலிச முன்னிலைக் கட்சிக்கும், காவல்துறை ஆணைக்குழுவுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குமே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். உண்மையில், பசில்ராஜபக்ச, மக்கள் மீது மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்.
ஜூலை 9ஆம் திகதி போராட்டத்துக்கு சுமார் 10 இலட்சம் பேர் வந்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
