ரணில் விக்ரமசிங்கவுடன் டீல்காரர்கள்! எச்சரிக்கும் கோட்டாபய
ரணிலுடன் டீல்காரா்கள்
நல்லாட்சியின்போது ரணில் விக்ரமசிங்கவுடன் இருந்தவர்கள் ( டீல்காரர்கள்) ஒப்பந்தக்காரர்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள், ரணில் விக்ரமசிங்கவின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையதிகாரி சாகல ரட்நாயக்க, கோட்டாபய ராஜபக்சவை கடந்த வாரம் சந்தி்த்தபோது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில், ஐக்கிய தேசியக்கட்சியின் இந்த முக்கிய பிரமுகர், ஏற்கனவே பணம் சம்பாதிக்கும் ஒப்பந்தங்களை ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் கோட்டாபய, சாகல ரட்நாயக்கவிடம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரமுகர், பிரதமர் அலுவலகத்தில் தமக்கென ஒரு நிர்வாகப்பிரிவை ஆரம்பித்துள்ளார் என்று கூறிய கோட்டாபய, பழைய குழுவுடன் பயணத்தை தொடரமுடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
எனினும் ரணில் விக்ரமசிங்கவுடன் டீல்காரர்கள் இருக்கிறார்கள் என்று ஜனாதிபதியின் குற்றச்சாட்டை , பிரதமர் அலுவலக பேச்சாளர் மறுத்துள்ளார்.
சாகலவின் “சேர்” கோட்டாபய
இதேவேளை சாலக ரட்நாயக்க, கோட்டாபய ராஜபக்சவை, ஐயா! (சேர்) என்றே அழைத்து வருகிறார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தமைக்காகவே தாம் கோட்டாவை சேர் என்று அழைப்பதாக சாகல ரட்நாயக்க காரணம் கூறியுள்ளார்.