மோடியை சந்திக்கும் சந்தர்ப்பத்தை மீண்டும் இழந்த பசில்!
கொரோனா தீவிரத்தை அடுத்து இந்திய குஜராத்தில் நடைபெறவிருந்த “குஜராத் மாநாட்டை” ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்த இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருந்தார்.
(ஏற்கனவே அவர் கடந்த மாதம் இந்தியா சென்றிருந்த போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எதிர்பார்த்தபோதும், அது இடம்பெறவில்லை)
இந்த மாநாடு, எதிர்வரும் 10ஆம் திகதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்கப்படவிருந்தது.
இந்த மாநாட்டில் நேபாளம், ரஸ்யா ஆகியவற்றின் பிரதமர்களும் பங்கேற்கவிருந்தனர்.
மாநாட்டில் 26 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவிருந்தனர்.
இந்தநிலையில், மாநிலத்தில் கொரோனா தொற்றின் பரவலைக் கருத்திற் கொண்டு முதலமைச்சர் பூபேந்திரா பட்டேல், மாநாட்டை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளார்.
குஜராத்தில் நேற்று மாத்திரம் 4213 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.