பசில் ராஜபக்சவின் கையில் அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கவில்லை!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கைகளில் அலாவுதீனின் அற்புத விளக்கு இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகவியலாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதுடன் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என கூறிய போதிலும் அவ்வாறான எதனையும் காண முடியவில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சாகர காரியவசம் இந்த பதிலைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கினால் அவர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவார். அடுத்த தேர்தலுக்கு முன்னதாக சகல சவால்களையும் வெற்றி கொண்டு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.
அடுத்த தேர்தலில் அமோக வெற்றியீட்டும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அடுத்த தேர்தலுக்கு செல்ல முன்னர் நாட்டின் நிலைமை முற்று முழுதாக மாற்றம் பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் தருவாயில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என்ற அர்த்தத்தில் தாம் கூறவில்லை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5