ஜனாதிபதி பதவிக்கு பசில் தகுதியுடையவர்! – திஸ்ஸகுட்டியாரச்சி
இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தகுதியுடையவர் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பசில் ராஜபக்ச என்பவர் தெளிவாகவே இந்த நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவிக்கு எதிர்காலத்தில் தகுதியுடையவர்.
இன்று சிலர் அவரை விமர்சனம் செய்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியை உருவாக்கி இன்று பதவி வகிக்கும் அரசாங்கத்தை உருவாக்கிய பெருமை அவரைச்சாரும்” என தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி ராஜபக்ச குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பக்கபலமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
