அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம் (Video)
அடிப்படையிலேயே 13ம் திருத்தச்சட்டம் பழுதுப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி தொடங்கி இன்றுடன் 72 ஆண்டுகள் பூர்த்தியானதினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிவாஜிலிங்கம் (Shivajilingam) ஒன்றை நியாபகப்படுத்தினார். 49 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சி ஸ்தாபிக்கப்பட்ட நாள். இன்றுடன் இலங்கை தமிழரசு கட்சிக்கு 72 வயதாகின்றது.
தமிழ் தேசியத்தின் பிதாமகன் தந்தை செல்வா என்று அவர் சொன்னார். அதில் ஒரு பெரிய உண்மை இருகின்றது. 500 வருட கால இடைவெளிக்கு பிறகு நாங்கள் ஒரு தேச உணர்வை, ஒரு விபரிப்பை, ஒரு கொள்கை நிலைப்பாட்டை மீழவும் உருவாக்கியது இலங்கை தமிழரசு கட்சி.
49 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது தந்தை செல்வா ஆற்றிய சொற்பொழிவு பின்னர் 51 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்திலே கட்சி தீர்மானமாக அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு.
அந்த நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ச்சியாக பயணத்திருக்கின்றோம். அந்த நிலைப்பாட்டிற்கு எங்களுடைய மக்கள் ஆதரவு 56 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இன்று வரை இருந்து இருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
1 .‘‘பிரபாகரனின் உறவினர் தொடர்பில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்தி’’
2.யாழ்.பொது மேடையில் அரசியல்வாதிகளின் செயலை தெறிக்கவிட்ட அரசியல் விமர்சகர்
3.‘‘இந்தியாவிற்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள சீனத்தூதுவரின் யாழ்.விஜயம்’’
4.தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு
5.தென்னிலங்கையின் இரகசிய நடவடிக்கை! 2050 இல் மன்னார் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து