தென்னிலங்கையின் இரகசிய நடவடிக்கை! 2050 இல் மன்னார் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து (Video)
சீன தூதுவர் சென்று பார்வையிட்டது மன்னாரை அல்ல 2050 ஆம் ஆண்டின் 'இரஜ ரட்ட' என்ற புதிய மாகாணத்தின் அங்கமான மன்னாரை தான் என மூத்த நிர்வாக அதிகாரி செல்ரின் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எல்லோரும் பேசுகின்ற தமிழ் தேசியம் அது என்ன மந்திரமா? தமிழ் தேசியம் என்பது ஒரு வாழ்வியல். அதை கட்டமைப்பதற்கு உழைக்காமல் வெறுமனே அதனை அடையாளமாக தூக்கி போட்டு கொண்டு அதனை பிரச்சாரமாக கொண்டு திரிவதாக இருந்தால் தமிழ் தேசியம் வாழுமா அல்லது சாகுமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,
தேசியம் என்றால் என்ன? மண், மக்கள், மாண்பு அது மூன்றும் இணைந்த மாநிலம். மக்கள் இருக்க வேண்டும் ஒரு மண்ணில். அந்த மக்களுடைய மாண்பு, பன்பாடு, கலை, கலாச்சராம், மொழி என்ற பல் வேறு விடயங்கள் செலித்திருக்க வேண்டும்.
அந்த மூன்று விடையங்களும் இணைந்ததாக, அது ஒரு பெரு நிலமாக உருவகிக்க வேண்டும். இங்கு என்ன நடகின்றது. நான் ஒரு நாளும் இவர்களை தமிழ் தலைவர்கள் என கூறுவதே இல்லை.
நேற்று முந்தினம் சீன இராஜத்தந்திரி மன்னாரிற்கு சென்று இராமர் அணையினை பார்வையிட்டார் என்று செய்திகள் பத்திரிக்கைகளில் வெளிவந்தது.
நாங்கள் நினைத்து கொண்டிருகின்றோம், அவர் சென்று பார்வையிட்டது வடக்கு மாகாணத்தின் ஒரு மாவட்டத்தின் அங்கமான மன்னாரை என்று நாங்கள் நினைத்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் அவர் சென்று பார்வையிட்டது. 2050 ஆம் ஆண்டில் 'இரஜ ரட்ட' என்ற புதிய மாகாணத்தின் அங்கமான மன்னாரை. அதற்கான திட்டங்கள் எல்லம் ஏற்கனவே திட்டப்பட்டு மிகவும் நிதானமாக நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்
‘‘பிரபாகரனின் உறவினர் தொடர்பில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்தி’’
யாழ்.பொது மேடையில் அரசியல்வாதிகளின் செயலை தெறிக்கவிட்ட அரசியல் விமர்சகர்
‘‘இந்தியாவிற்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள சீனத்தூதுவரின் யாழ்.விஜயம்’’
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு