‘‘விடுதலை புலிகளின் தலைவரின் உறவினர் தொடர்பில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்தி’’ (VIDEO)
அமெரிக்க தூதுவரினால் அனுப்பப்பட்ட அறிக்கையில், தமிழ் தலைவர்களில் சிவாஜிலிங்கம் ஒருவர் மாத்திரமே, வி.பு தலைவரின் உறவினரே சர்வதேச விசாரணையை வைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிங்களவர்களுக்கு ஒரு நாடாளுமன்றம்,தமிழர்களுக்கு ஒரு நாடாளுமன்றம் என அதியுச்ச பரீட்சையத்தை கோருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அமரர் நாகராஜா தலைமையிலான கூட்டமே 50 வருடங்களுக்கு முன்னரான இனவிடுதலைக்கு காரணமாக அமைந்தது.ஒற்றுமை தான் பலம் என்பதை எமது வரலாறு எடுத்துக்காட்டுகின்றது.
77ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி சென்ற பாதையை எதிர்த்தவர்கள் நாங்கள்.எனவே ஒற்றுமை தான் பலம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்பில் எவ்வளவு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தாலும்,2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டு ராஜாங்க திணைக்களத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னரே ஜெனிவாவில் பிரச்சினைகள் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
1.யாழ்.பொது மேடையில் அரசியல்வாதிகளின் செயலை தெறிக்கவிட்ட அரசியல் விமர்சகர்
2.தென்னிலங்கையின் இரகசிய நடவடிக்கை! 2050 இல் மன்னார் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து
3.தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு
4.அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்
5.‘‘இந்தியாவிற்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள சீனத்தூதுவரின் யாழ்.விஜயம்’