தமிழ் வைத்தியசாலை ஒன்றுக்கு சீனாவில் கிடைத்துள்ள விருது (Photos)
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு 3R System திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் தேசிய விருதான தங்கப்பதக்கமும், சீனாவில் சர்வதேச விருதான தங்கப்பதக்கமும் கிடைத்துள்ளது.
இவ்விருதை சீனாவில் பெற களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரதிநிதியாக வைத்தியர் மயூரேசன் சென்றுள்ளார்.
இந்த விருது இலங்கைக்கு கிடைத்துள்ள இரண்டாவது விருதாகும். முதலாவது விருது அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அமரர் லங்காதிலக்க பெற்றுள்ளார்.
வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன், மயூரேசன் ஆகியோரை கடந்தவாரம் அமைச்சில் வாழ்த்தியதோடு சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண ,செயலாளர் மகிபால பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணன், வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன், வைத்தியசாலையின் ஊழியர்கள், வைத்தியர் மயூரேசன், வைத்தியசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு விசேட நன்றிகளும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வைத்தியசாலைக்காக உறுதுணையாக சுகுணன்,கருணா,வசீகரன்,பேரின்பநாயகம் ,சதுர்முகம்,தேவராஜன்,முருகானந்தம் ,யோகராஜா,தேவராணி ,கனகசபை,வெள்ளிமலை,செல்வராஜா ,தட்சனாமூர்த்தி ,புவனேந்திரநாதன் ,குறுமன்வெளி கருணா வைத்தியர் அஃபர் அலி ஆகியோர் தொடர்ந்து நினைவுகூரப்படவேண்டியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |