யாழில் தனிமையில் இருந்த பெண் மீது சரமாரியான தாக்குதல்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது நேற்று (01.08.2024) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று அதிகாலையில் குடத்தனை மேற்கில் தனிமையில் தூக்கிக்கொண்டிருந்த 68 வயதுடைய வயோதிப் பெண்மீது தாக்குதல் நடாத்திய மர்ம நபர்கள் தங்க தோடு, தாலி ஆகியவற்றையும் கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபா பணத்தையும் பறித்தெடுத்ததுடன் அவர்களது காணிகளின் உறுதி பத்திரங்களையும் கோரியுள்ளனர்.
குறிப்பாக அண்மையில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தையும் கோரியுள்ளனர். அப்போது அச்சத்தில் அந்த முதிய பெண் உறுதிப் பத்திரத்தை காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
மேலும், குறித்த பெண் அண்மையில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம் பெற்றுவரும் நிலையில், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிதாக
கொள்வனவு செய்த காணியில் இரவுக் காவலிற்காக தங்கியிருந்த கணவர் அதிகாலை 5
மணிபோல் தனது வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி இரத்த காயங்களுடன் கிடந்ததை
கண்டு உடனடியாக அயலவர் உதவியுடன் மீட்டு பருத்தித்துறை அதார
வைத்தியசாலையில் அனுமதுத்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 33 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
