அமைதிவழி போராட்டத்தின் மீது காட்டுமிராண்டி தனமான தாக்குதல்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம் (Photos)
அமைதிவழிப் போராட்டத்தின் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
”இலங்கைத் தீவில் எழுந்த அரசியல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அதற்குத் தீர்வு வேண்டி கடந்த ஒருமாத காலமாக காலிமுகத்திடலில் இடம்பெற்றுவந்த கட்சி சார்பற்ற அமைதிவழிப் போராட்டத்தின் மீது நேற்று முன்தினம் காடையர்களை திட்டமிட்ட ரீதியில் ஏவி நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழர்களாகிய நாங்கள் இவ்வாறான நிலைமைகளை கடந்த பல தசாப்தங்களாக எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் உங்கள் வலிகளை நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.
வன்முறை மற்றும் ஒடுக்கு முறை சார்ந்து, பிரச்சினைகளைத் தீர்க்க முனையும் அபாயகரமான முறைமையை இல்லாது செய்ய அனைத்து முற்போக்கு சக்திகளும் முன்வர வேண்டும் என கோரி நிற்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 36 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
