இலங்கை அரசியல்வாதிகளுக்கு இங்கிலாந்து - வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்!
உச்சநீதிமன்றத்துடன் மோதல் போக்கைத் தவிர்க்குமாறு இலங்கை அரசியல்வாதிகளுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலங்கையில் உள்ள நாடாளுமன்ற அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்றக் குழுவின் முன் விசாரிக்கும் தகுதியை மிகக் கவனமாக மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறோம்.
அதேபோல் இலங்கை அரசும் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத செயற்பாடுகளை ஊக்குவிப்பது எப்போதுமே சரியாக இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கை வெளியீடு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் பிரேம்நாத் தொலவத்த எம்.பி ஆகியோர் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளை இந்த வெளியீடு மேற்கோள் காட்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டத்தின் ஆட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசுகள் இணங்க வேண்டும் என்ற கொள்கையும் அதுவே'' என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பார் கவுன்சிலின் தலைவரான நிக் வினெல் குறிப்பிட்டுள்ளார்.
தலையீடு இருக்கக்கூடாது
நீதித்துறையின் சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் அடிப்படைக் கோட்பாடுகள், "நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பதும், கடைப்பிடிப்பதும் அனைத்து அரசு மற்றும் பிற நிறுவனங்களின் கடமையாகும்.
மேலும், "நீதித்துறை செயல்பாட்டில் தகாத அல்லது தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது,” என்று இருப்பதை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
