பரபரப்பான சூழ்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.
அரசாங்க கட்டங்களை கைப்பற்றி வன்முறை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயற்பட வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு செயற்பட்டால் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆதரவு வழங்கப்படாதென சட்டத்தரணிகள் சங்கத்தினர் சற்று முன்னர் எச்சரிக்கை விடுத்தள்ளனர்.
மேலும் போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தை உடன் அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
