திவாலான நிலையில், குழந்தைகளுக்கு உணவு வழங்க அவசர உதவியை நாடும் இலங்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக 10 பேரில் ஒன்பது பேரை அரச கைகளை நம்பியிருப்பதால், குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க அரசாங்கம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
போதிய உணவின்மையால் பல இலட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்க தனியார் நன்கொடைகளை நாடியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் இலங்கையால் டொலரை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
நிலைமை மிகவும் மோசமாக உள்ளது
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னே, “கோவிட் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது, பிரச்சினை மோசமாக இருந்தது,எனினும் தற்போது, பொருளாதார நெருக்கடியுடன், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐந்து வயதுக்குட்பட்ட 570,000 பெண்கள் மற்றும் சிறுவர்களில் 127,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கணக்கிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதிருந்து, பரவலான பணவீக்கம், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையின் காரணமாக இந்த எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளதாக அவர் மதிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நிதி உதவிக்காக அரசாங்கத்தை நம்பியிருந்ததால், நேரடி அரசு உதவிகளை பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் சுமார் 1.6 மில்லியன் அரசாங்க ஊழியர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் பணவீக்கம் 60.8 சதவீதமாக உயர்வு
இலங்கையின் பணவீக்கம் ஜூலையில் உத்தியோகபூர்வமாக 60.8 சதவீதமாக அளவிடப்பட்டுள்ளது.
எனினும், தனியார் பொருளாதார வல்லுநர்கள் இது 100 சதவீதத்திற்கும் அதிகமாகவும் ஜிம்பாப்வேக்கு அடுத்தபடியாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் சிறுவர்கள் விகிதாசார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட நிதியளிக்கும் அந்நியச் செலாவணி இல்லாமல் போனதுடன், ஏப்ரல் நடுப்பகுதியில் கொழும்பு அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுவதை நிறுத்தியது.
இந்நிலையில், புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ், அரசாங்கம் இப்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஒரு காலத்தில் தெற்காசியாவின் சிறந்த சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த நாட்டின் 22 மில்லியன் மக்கள் நீண்ட நாள் மின்வெட்டு, எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் மற்றும் பிரதான உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.