முல்லைத்தீவில் கூட்டுறவு வர்த்தக நிலையத்தில் திருட்டு..! இளைஞன் கைது
முல்லைத்தீவு கூட்டுறவு வர்த்தக நிலையத்தில்(copcity) கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் திருடப்பட்டுள்ளது.
இதன்போது, I phone கையடக்க தொலைபேசி ஒன்றும், 52,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.
சீசிரீவி காட்சி
குறித்த கூட்டுறவு வர்த்தக நிலைய நிர்வாகத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து வங்கயில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியின் உதவியுடன், திருடப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரின் முகநூலில் போடப்பட்ட தொலைபேசி பதிவினையும் அடிதளமாக கொண்டு நேற்றையதினம் (20.04.2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்காெண்டு வருகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
