சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலரை செலுத்தும் மக்கள் வங்கி
மக்கள் வங்கி, சீன உர நிறுவனத்திற்கு இன்றைய தினம் 6.9 மில்லியன் டொலர் பணத்தை செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேதன உர இறக்குமதி தொடர்பில் இலங்கைக்கும், சீன நிறுவனத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் வழக்குகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து Qingdao Seawin Biotech Group Co., Ltd நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் 6.9 மில்லியன் டொலர் செலுத்துவதாக இணங்கியிருந்தது.
குறித்த சீன நிறுவனத்திற்கு, மக்கள் வங்கி இன்று இந்த நட்டஈட்டுத் தொகையை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேதன உரப்பிரச்சினை காரணமாக மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏளனமாகப் பார்த்தார்கள், குழந்தைகள் தான் வெற்றிக்கு காரணம்.. நடிகர் விஜய் தேர்தல் வெற்றிக்கு பின் முதல் அறிக்கை Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam