நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தில் வங்கிக் கடன்: வெளியான தகவல்
பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கே அனுமதி கிடைத்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்
2024 சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்கான கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற திறைசேரி பிரதிச் செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுகள், திணைக்களங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் படி சிறுபோகத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெற் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளது.
இதன்படி வங்கிகள் மூலம் 6,000 மில்லியன் ரூபா சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
