கடன் வழங்கும் புதிய திட்டம் நடைமுறை! அரச வங்கிகளுக்கு விசேட பணிப்புரை
அரச வங்கிகள் மூலம் பல இலட்சங்கள் மானிய வட்டி வீதத்துடன் கடன் வழங்குவது குறித்து விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வேலையற்ற இளைஞர்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக மானிய வட்டி வீதத்துடன் கடன்களை பெற்றுக் கொள்ளும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அரச வங்கிகளில் கடன் பெற முடியாத விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும்.
ஹம்பாந்தோட்டையில் முதற்கட்ட நடவடிக்கை
இளைஞர்களிடையே இது போன்ற ஆர்வங்களை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும், ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஆர்வமுள்ளவர்கள் சொந்தமாக பண்ணை அல்லது கால்நடை வளர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தினது ஒரு பகுதியாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 இளைஞர்களுக்கு 6.5% என்ற வட்டி வீதத்தில் 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாவை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச வங்கிகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
