சுதந்திர கட்சியில் இருந்து மைத்திரியை விரட்டுங்கள்: மேர்வின் அறைகூவல்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டுங்கள் என்று அக்கட்சி உறுப்பினர்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது இந்நாட்டில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுத்த கட்சியாகும்.
கட்சி ஆதரவாளர்கள்
கிராமத்தில் பிறந்தவர்களுக்குக்கூட வாய்ப்பளித்த கட்சியாகும். இப்படிப்பட்ட கட்சியானது மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் சீரழிந்துள்ளது.
எனவே, மைத்திரிபால சிறிசேனவை விரட்டுமாறு கட்சி ஆதரவாளர்களிடம், உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவரை அவர் இழைத்துள்ள தவறுகளே போதுமானவை. அவருக்கு மூளையில் பிரச்சினை இருப்பதையே அவரின் அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றது. அரபு நாடாக இருந்திருந்தால் அவர் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பார் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan