ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது குறித்து பங்களாதேஷின் புதிய திட்டம்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் படி இந்திய அரசாங்கத்துக்கு பங்களாதேஷ் கடிதம் எழுதியுள்ளது.
குறித்த கடிதமானது நேற்றையதினம்(22) எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், கடிதத்தில் உள்ள தகவல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
நாடு கடத்த திட்டம்
கடந்த ஆண்டு ஜூலை - ஓகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு கடந்த (17) ஆம் திகதி நடாத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் உடனடியாக எமது நாட்டிற்கு அனுப்புங்கள் எனவும் பங்களாதேஷ் கோரியுள்ளது.
இதேவேளை, ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு அழைத்து வர இன்டர்போல் உதவியை அந்நாட்டு அரசாங்கம் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan