பாகிஸ்தானிடம் போர் விமானங்களை கோரியுள்ள பங்களாதேஷ்
பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை பங்களாதேஷ் வாங்குவது குறித்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்கவும், பங்களாதேஷ் விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் வங்கதேசம் அனுமதி கோரியுள்ளது.
பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
விமான சேவை
குறிப்பாக பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பங்களாதேஷ் அரசு நேரடி விமான சேவையை வருகின்ற 29 ஆம் திகதி அரம்பிக்கவுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.