பங்களாதேஷ் தீ விபத்து மற்றும் வெடிப்புகளில் 40பேர் பலி! எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்!
கொள்கலன் சேமிப்பகத்தில் தீ
பங்களாதேஷின் சிட்டகொங் நகருக்கு அருகில் உள்ள கொள்கலன் சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ மற்றும் பெரும் வெடிப்பு காரணமாக குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்
அத்துடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தீ ஏற்பட்ட சில கொள்கலன்களில் இரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு குறைப்பாடு
பங்களாதேஷில் தொழில்துறை தீ விபத்துகள் பொதுவானவை.
அவற்றுக்கு மோசமான பாதுகாப்பு விதிமுறைகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்தநிலையில் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், எனவே பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
காணவில்லை
வெடிவிபத்தில் குறைந்தது ஐந்து தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
வெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் தீ பற்றிய செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலரை இன்னும் காணவில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமையும் சம்பவ இடத்திலிருந்து உடலங்கள் மீட்கப்பட்டன.
பங்கதேசத்தில் உள்ள பலர் இந்த வெடிப்பை 2020 இல் பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்புக்களுடன் ஒப்பிடுகிறார்கள்.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
