நடப்பு உலகக்கிண்ண தொடரில் புதிய சர்ச்சையில் சிக்கிய பங்களாதேஸ்
பங்களாதேஸ் (Bangladesh) மற்றும் நேபாள் (Nepal) அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்களாதேஸ் துடுப்பாட்ட வீரர் டன்ஷிம் ஹசன் ஷகிப் (Tanzim Hasan Shakib) நடுவரின் தீர்ப்பை மீள்பரீசலனை செய்த முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் அர்னோஸ் வேல் மைதானத்தில் இன்று (17.06.2024) நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்களாதேஸ் அணி நேபாள் அணியை 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
போட்டியில் பங்களாதேஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும் டன்ஷிம் ஹசன் ஷகிப்பின் விக்கெட்டை மீள் பரிசீலனை செய்யும் காணொளி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகிர் அலி
போட்டியின், 14ஆவது ஓவரை நேபாள் சுழற்பந்து வீச்சாளர் லமிச்சான்னே வீசிய போது, அதை எதிர்கொண்ட டன்ஷிம் ஹசன் ஷகிப், 'LBW' முறையில் ஆட்டமிழந்தார்.
When Tanzim was out on LBW, Bangladeshi player the non-striker Jaker went to the dressing room to ask for assistance during the DRS call.
— マ ๏Le?乛 (@VK50th) June 17, 2024
How is @ICC able to permit this? Not even the umpire knows about this.even after the allotted time has passed,the third umpire is still used pic.twitter.com/wQXbRzJn5V
இதனையடுத்து, டன்ஷிம் ஹசன் நடுவரின் முடிவை மீள்பரிசீலனை செய்யாது மைதானத்தில் இருந்து வெளியேற முற்பட்டார்.
எனினும், எதிர்முனையில் துடுப்பெடுத்தாடிய ஜாகிர் அலி பங்களாதேஸ் குழாம் இருந்த இடத்தை நோக்கியவாறு, திடீரென ஹசனை முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு கூறினார்.
கால அவகாசம்
இவ்வாறு மைதானத்திற்கு வெளியே இருப்பவர்களிடம் சமிக்ஞைகளில் கலந்துரையாடி மீள்பரிசீலனை தீர்மானங்களை மேற்கொள்வது விதிமீறல் ஆகும்.
மீள்பரிசீலனையில், டன்ஷிம் ஹசன் ஆட்டமிழகவில்லை என நடுவர் தீர்ப்பு வழகியிருந்தாலும் மீள்பரிசீலனை செய்ய வழங்கப்பட்ட கால அவகாசமும் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |