இலங்கையுடனான நாணய பரிமாற்ற கொள்கைக்கு பங்களாதேஸ் ஒப்புதல்
பங்களாதேஷின் வங்கி சபை, இலங்கையுடன் 200 மில்லியன் டொலர் நாணய பரிமாற்ற கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இது ஒரு மிதமான அந்நிய செலாவணி இருப்பை பராமரிப்பதாக இலங்கையால் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்தநிலையில் பங்களாதேஸ் அரசாங்கத்தால் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்ற பின்னர் இலங்கையுடன் நாணய பரிமாற்ற உடன்படிக்கை இறுதி செய்யப்படும் என்று பங்களாதேஸ் வங்கிச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று டாக்காவில் உள்ள பங்களாதேஸ் வங்கிச்சபையின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்கு வங்கியின் ஆளுநர் பாஸ்ல் கபீர் தலைமை தாங்கினார்.
இந்தநிலையில் இலங்கைக்கு வழங்கப்படும்.இந்த கடனுக்காக 1-2 சதவிகிதம் மற்றும் லண்டன் வங்கிகளுக்கு இடையிலான சலுகை வீதத்தில் வட்டியைப் பங்களாதேஸ் பெற்றுக்கொள்ளும். இதேவேளை இது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை தாம் பெற்றக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்துக்கொள்ளவும் வழியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷின் சுதந்திரத்தின் பொன்விழாவின் கொண்டாட்டங்களில பங்கேற்க சென்றிருந்தபோது இந்த கடனுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்கனவே இலங்கை ஏற்கனவே சீன மக்கள் வங்கியுடன் 10 பில்லியன் யுவான் அல்லது 1.5 பில்லியன் டொலர் கடனை நாணய பரிமாற்றக்கொள்கைக்காக பெற்றுள்ளது.
இதேவேளை 2021 மே மாதத்தில், பங்களாதேஷின் அந்நிய செலாவணி ஒதுக்க இருப்பு 45 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்தது. எனினும் இலங்கையின் அந்நிய செலாவணி ஒதுக்க இருப்பு 2021 மார்ச் மாதத்தில் 4.05 பில்லியன் டொலர்களாக இருந்தது.