முன்னாள் அமைச்சர் பந்துலவிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. நாளைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பந்துலவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாளைய தினம் தாம் ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பனி பதிவாளர் நிதியத்தின் ஒன்பது கோடி ரூபா பணத்தை வேறும் அரச நிறுவனத்தில் முதலீடு செய்து 59.5 வீத வருமானம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலான முறைப்பாட்டின் அடிப்படையில் பந்துல குணவர்தனவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படுகின்றது.

கடந்த 2007ம் ஆண்டில் பந்துல குணவர்தனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த அரசாங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்த அமைச்சர்கள் உயர் அரச அதிகாரிகள் தற்பொழுது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.