அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பந்துல குணவர்தன அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன , கொழும்பில் இன்று (04.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ள அவர்,
“கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஹோமாகமை பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, கெபினட் அமைச்சராக முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதேசத்தை முடிந்தளவு அபிவிருத்தி செய்துள்ளேன்.
சினிமா தயாரிப்பாளர்
இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவும், எதிர்வரும் ஓரிரண்டு வருடங்களை இன்னொரு கலாநிதி கற்கை விடயங்களில் கவனம் செலுத்தவும் தீர்மானித்துள்ளேன்.
அத்துடன், முன்னர் போன்று மீண்டும் சினிமா தயாரிப்பாளராக செயற்படவும் விருப்பம் கொண்டுள்ளேன். மற்றபடி இனி அரசியலுக்கு திரும்பி வரும் எண்ணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
