நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள பந்துல குணவர்தன
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று (03) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், "ஹோமாகம தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் ஈடுப்பட்டுள்ளேன்.
பதிவி நிலை
இந்நிலையில், நான் பிரதி அமைச்சராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் செயற்பட்டுள்ளேன். குறித்த காலப்பகுதியில் என்னால் இயன்ற சேவைகளை மக்களுக்குச் செய்துள்ளேன்.
 
நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த ஹோமாகம தொகுதியை நான் பிரதிநிதித்துவப்படுத்தியமைக்கும், ஹோமாகம நகரை கல்வியின் மையமாக மாற்றியமைக்காகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கலாநிதிப் பட்டத்தைப் பெறுவதற்காகக் கல்வியைத் தொடரவும், திரைப்படம் தயாரிப்பதற்கும் எனது நேரத்தைச் செலவிடத் திட்டமிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri