முல்லைத்தீவு - கற்சிலைமடுவில் பண்டாரவன்னியனின் 219வது வெற்றி நினைவு நாள் (Photos)
வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றி கொண்ட 219ஆவது ஆண்டு நாள் நேற்றாகும்.
அதனடிப்படையில் மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 219வது வெற்றி நினைவு நாள் நிகழ்வு கற்சிலைமடு பண்டாரவன்னியனின் உருவச்சிலை வளாகத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவன்னியன் வெற்றி நினைவு நாள்
219ஆவது விழாக் குழுவின் தலைவர் சி.நாகேந்திரராசா தலைமையில் இடம்பெற்ற வெற்றி நினைவு நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
கற்சிலைமடுவில் உள்ள பண்டாரவன்னியனின் உருவச்சிலை வளாகத்திற்குள் உள்நுழையும் பிரதான வீதியின் வாயிலில் பெயர்ப்பலகையினை நிகழ்வின் பிரதம விருந்தினரான முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்ததைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வின் அம்சங்கள்
தொடர்ந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு முன்றலில் மங்கள விளக்கேற்றலுடன், பண்டாரவன்னியன் வாள் கொடி பிரதம விருந்திரனால் ஏற்றப்பட்டு, கொடி கீதம் இசைக்கப்பட்டது.
கலந்து கொண்டிருந்த அதிதிகளால் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்
சி.ஜெயக்காந், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ.றமேஸ், ஒட்டுசுட்டான்
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி க.சுதர்சன், துணுக்காய் வலயக்
கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன், முல்லைத்தீவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர்
ச.யசிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.







ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
