பண்டாரவன்னியன் சதுக்கம் அங்குரார்பண நிகழ்வு (Video)
வவுனியாவில் வன்னி மன்னன் பண்டாரவன்னியன் சதுக்கம் இன்று(25) அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பண்டாரவன்னியன் சிலை அமைந்துள்ள சந்திப்பகுதி இன்றிலிருந்து பண்டாரவன்னியன் சதுக்கம் என அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பண்டாரவன்னியனின் 219 வது நினைவுநாள் நிகழ்வு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அவரது சிலையடியில்அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
பெயர் சூட்டு விழா
இதனையடுத்து குறித்த சிலைக்கு முன்பாக ஒருங்கிணைந்து செல்லும் மன்னார் பிரதான வீதி மற்றும் ஏ9 வீதி ஒன்றிணையும் பகுதிக்கு, இன்று முதல் பண்டாரவன்னியன் சதுக்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த சதுக்கம் நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் பலர்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
