விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணம் அதிகரிப்பு
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணத்தை ரூ.2,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறும்போது விண்ணப்பிக்கும் காலத்தைப் பொறுத்து வெளிநாட்டினர் ரூ.15,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
வர்த்தமானி அறிவிப்பு
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் விளக்கமளித்த போது,
வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் அது டொலர்களில் செலுத்தப்பட வேண்டும் என்றும், இப்போது அது திருத்தப்பட்டு ரூபாயில் செலுத்தப்படும் என்றும் இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் கூறினார்.




