ஹோர்முஸ் நீரிணை ஊடான உரப் போக்குவரத்துக்கு தடை : உணவுப் பாதுகாப்பு நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் பெரும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளர் ஜோர்ஜ் மொரேரா டா சில்வா எச்சரித்துள்ளார்.
விவசாயிகளுக்கான பயிர்க்காலம் நெருங்கி வருவதால், அடுத்த சில வாரங்களுக்குள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடனான திட்டத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொள்ள வேண்டியது "மிகவும் அவசியமானது" என தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற IMF மற்றும் உலக வங்கி கூட்டங்களுக்கு இடையே அவர் தெரிவித்தார்.
உர ஏற்றுமதி
ஓமானில் ஐக்கிய நாடுகளின் ஊழியர்களைக் கொண்ட ஒருங்கிணைப்பு மையத்தை அமைத்து, கப்பல்களைப் பதிவுசெய்து பாதுகாப்புடன் அந்த நீரிணை வழியே இயக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் உரமான யூரியா ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கும், சல்பர் ஏற்றுமதியில் பாதியும் வழக்கமாக இந்த நீரிணை வழியே எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஆனால் போர் காரணமாக உரக் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் சொற்ப அளவிலேயே நடைபெறுகிறது.
எனினும், அமெரிக்காவும் ஈரானும் உடன்பட்டால் 7 முதல் 10 நாட்களுக்குள் இந்த விநியோக முறையைச் செயற்பாட்டிற்குக் கொண்டுவர முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் தெரிவித்துள்ளது.
தினமும் குறைந்தது 5 கப்பல்கள் சென்றாலே பேரழிவைத் தவிர்க்க முடியும் என உதவிப் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரத் தட்டுப்பாட்டினால் விவசாய உற்பத்தி கணிசமாகக் குறைந்து, உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயரும் அபாயம் உள்ளது.
இறக்குமதி உரங்களையே பெரும்பாலும் நம்பியிருக்கும் தெற்காசிய விவசாயிகள் ஏற்கனவே அதிக செலவு மற்றும் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் விவசாயிகளும் அதிக உற்பத்திச் செலவைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri