விமல் வீரவன்சவின் புத்தகம் வெளியிடப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
விமல் வீரவன்சவின் 'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை என்ற புத்தகத்தை வெளியிடுவதைத் தடுத்து வர்த்தக உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையாணையை நீக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜே.வி.பி. கட்சியின் முன்னாள் பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச, கடந்த 2007ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி தனியாக தேசிய சுதந்திர முன்னணி கட்சியை தாபித்து அதன் தலைவராக செயற்படுகின்றார்.
இந்நிலையில் ஜே.வி.பி.யில் இருந்து தான் விலக நேர்ந்த விடயங்கள் குறித்து அவர் 'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.
தடை நீக்கம்
குறித்த புத்தகத்தை வெளியிடுவதற்கு எதிராக ஜே.வி.பி. சார்பில் வர்த்தக உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த மனுவொன்றின் அடிப்படையில் புத்தகத்தை வெளியிடுவதற்கு எதிராக தடையாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கு எதிராக விமல் வீரவன்ச சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவில் வர்த்தக உயர்நீதிமன்றத்தின் தடையாணையை நீக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, புத்தகத்தின் ஆசிரியரான விமல் வீரவன்ச, நூலில் உள்ளடங்கியுள்ள டில்வின் சில்வாவின் கட்டுரைகளைத் தவிர மற்ற அனைத்தையும் வெளியிடலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri