புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கி ரணில் விசேட உத்தரவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது.
அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.
பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களை தடை செய்து இருந்தன.
மேலும் நல்லாட்சி அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படாது:சர்வக்கட்சி வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி |
| விரைவில் இலங்கை திரும்புவார் கோட்டாபய: இந்திக்க அநுருத்த |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam