இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடைநீக்கத்தை மீள ஆராயப்போவதில்லை: அரசாங்கம் அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் குறித்து மீளஆராயப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை தொடர்ந்து ஐந்து இஸ்லாமிய அமைப்புகளிற்கு எதிராக விதிக்கப்பட்டதடையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளார்.
எனினும் கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதனை கண்டித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தடை நீக்கப்பட்டமை குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், தற்போதைக்கு இது குறித்து மீள்பரிசீலனை செய்யும் திட்டம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு படையுடன் தொடர்புபட்டவர்களும் இணைந்து தடைகளை நீக்கும் முடிவை எடுத்தனர் என தெரிவித்துள்ள அவர், விமர்சனங்கள் உள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம், எனினும் இதனை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே செய்துள்ளோம் அரசியல்வாதிகள் எவரும் இதில் தொடர்புபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர பிரதான செய்திகளின் தொகுப்பு





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
