சிவனொளிபாத மலைக்கு செல்லத் தடை
அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு சென்று வழிபடலாம் என அண்மைய நாட்களில் வெளியான செய்திகள் உண்மையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2022-2023 சிவனொளிபாத மலை பருவகாலம் நிறைவடைந்துள்ள நிலையில், சிறீ பாதஸ்தானதிபதி சப்ரகமுவ மாகாண பிரதம சங்கநாயக பெங்கமுவே தம்மதின்னவின் பணிப்புரைக்கமைய அனுமதியின்றி ஹட்டன் வீதி மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாகவும் சிவனொளிபாத மலைக்கு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பலத்த மழை

பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் , சிவனொளிபாத மலைக்கு வருகை தரும் போது, உரிய நிறுவனங்களின் அனுமதியைப் பெற்று நல்லதண்ணி மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சிவனொளிபாத மலை பகுதியில் இடையிடையே பலத்த மழை பெய்து வருவதாலும், அங்கு செல்லும் படிகளில் பாரிய நீரோடை ஓடுவதாலும் சிவனொளிபாத மலைக்கு செல்வது ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு