வடமராட்சி கிழக்கில் உழவியந்திரம் கொண்டு கரைவலை தொழிலில் ஈடுபடுவதற்கு தடை
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை தொழில் ஈடுபடுவதை நிறுத்துமாறு நீரியல்வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் ஈடுபடுவதால் சிறு மீனவர்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.
தடை
இந்தநிலையில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழிலில் ஈடுபடுவது தடை செய்யப்படுவதாகவும், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரவலை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தடை நாடு முழுவதுக்குமானது எனவும் அறிவித்துள்ளது.
இருந்தும் வடமராட்சி கிழக்கின் ஒரு சில பகுதிகளில் தற்போதும் உழவியந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேக்ரான் அணிந்திருந்த சன்கிளாஸ்... ஒரே நாளில் பல மில்லியன் டொலர் தொகையைக் குவித்த நிறுவனம் News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan