இலங்கையில் 11 அமைப்புகளுக்கு தடை - வெளியான அறிவிப்பு
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியினை சட்டமா அதிபர் வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஐக்கிய தௌகீத் ஜமாஅத், சிலோன் தௌகீத் ஜமாஅத், இலங்கை தௌகித் ஜமாஅத், அகில இலங்கை தௌகீத் ஜமாஅத், ஜம்மியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா, தாருல் ஆதார்:ஜமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ்.எம்), இஸ்லாமிய அரசு ஈராக் சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்), அல்கொய்தா, சேவ் த பேர்ள்ஸ், சூப்பர் முஸ்லிம் ஆகிய அமைப்புகளே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாட்டுக்குள் இயங்கி வரும் அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்வதன் அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டியள்ள நிலையில், அவ்வாறான பல அமைப்புகளை தடை செய்வது தொடர்பில் செலுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri