பம்பலபிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு – பம்பலபிட்டி பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை பகுதியிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் வயோதிபர் ஒருவர் மீது மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பம்பலபிட்டி பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மற்றும் யுவதி ஒருவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் News Lankasri
