பலோகன் சிவப்பு அட்டை விவகாரம்: ஃபிஃபா தலைவர் மீது விசாரணை நடத்த கோரிக்கை
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அமெரிக்கா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அமெரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஃபோலரின் பலோகனுக்கு சிவப்பு அட்டை (Red card) காண்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையிட்டதை அடுத்து, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா பலோகனின் தடையை அதிரடியாக நீக்கியுள்ளது.
சிவப்பு அட்டை தடை
உலகக் கிண்ண வரலாற்றில் போட்டித் தொடரின் நடுவே சிவப்பு அட்டை தடை நீக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
\
இந்த தடையை நீக்கிய பின்னர் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியத்திடம் 4-1 என்ற கணக்கில் தோற்று அமெரிக்கா உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறிய போதிலும், ஃபிஃபாவின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் அரசியல் அழுத்தத்திற்குப் பணிந்தே ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ இந்த முடிவை எடுத்ததாகக் குற்றம் சாட்டி, அவர் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்
"போட்டியின் நடுவே சிவப்பு அட்டை விதிகளை மாற்றுவது அநீதியானது மற்றும் வெட்கக்கேடானது" என்று ஐரோப்பிய எம்பிக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுஇஎஃப்ஏ (UEFA)-வும் ஃபிஃபாவின் இந்த முடிவை "விளக்க முடியாத, நியாயமற்ற செயல்" எனக் கண்டித்துள்ளது.
ஆனால், இந்த முடிவை ஃபிஃபாவின் ஒழுங்குமுறைக் குழுவே எடுத்ததாகக் கூறி இன்ஃபான்டினோ தன்னைத் தற்காத்துக் கொண்டுள்ளார்.