பேக்கரி உற்பத்திகளின் விலை குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் உற்பத்தி விலை

தற்போதைக்கு பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் உற்பத்தி விலைகளை குறைக்கும் சாத்தியமில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு, பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க போதுமானதல்ல என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு சமாந்திரமாக ஏனைய பொருட்களின் விலைகள் உயர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan